மனதால் நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள். மனமானது மனிதனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும், மனிதன் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் ஆற்றல் உடையது என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். நாம் இடும் கட்டளைகளை மனம் நிறைவேற்றும் எனும்போது மனதின் ஆற்றலை ஏன் நோய்களைக் குணப்படுத்துவதற்கு பயன்படுத்தக் கூடாது? மனதை முறையாக பயன்படுத்தும் போது மனதின் உதவியைக் கொண்டு உடலில் உண்டாகும் அனைத்து வகையான உபாதைகளையும், தொந்தரவுகளையும், வலிகளையும் நோய்களையும் நிச்சயமாகக் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
இரவு உறங்குவதற்கு முன்பாக படுக்கையில் அமர்ந்துக் கொண்டு, ஐந்து நிமிடங்கள் தியான நிலையில் அமைதியாக இருங்கள். பின் உங்களுடனே நீங்கள் பேசுங்கள். உங்கள் பெயரைச் சொல்லி நீங்களே அழைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அழைப்பது உங்களின் உயர்நிலை ஆன்மாவை (your higher-self) உங்கள் உடலில் உண்டாகியிருக்கும் உபாதைகளை உங்களிடமே கூறுங்கள். காலை எழுந்திருக்கும் நேரத்தைக் கூறி அதற்குள் இந்த தொந்தரவைக் குணப்படுத்திவிடு என்று மூன்று முறை வேண்டிக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு, “ராஜா இந்நேரம் முதல் காலை 7 மணி வரையில் நான் உறங்குவேன். எனக்கு நல்ல திருப்தியான தூக்கத்தைத் தந்து, நான் எழுந்திருப்பதற்கு முன்பாக, என் கழுத்தில் ஏற்பட்டிருக்கும் சுளுக்கையும் உடல் வலிகளையும் குணப்படுத்திவிடு” என்று மூன்று முறை கூறிவிட்டு உடனே உறங்கச் செல்லுங்கள்.
காலையில் எழுந்திருக்கும் போது உங்கள் உடலில் நல்ல முன்னேற்றம் உண்டாகி இருப்பதை உங்களால் உணர முடியும். உடலின் வலிகள் குறைவதையும், நோய்கள் குணமாகத் தொடங்குவதையும், தொந்தரவுகள் மறைவதையும் காண்பீர்கள்.
உடலில் பல தொந்தரவுகள் உடையவர்கள், ஒவ்வொரு தொந்தரவாக குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உடலில் 10 தொந்தரவுகள் இருந்தாலும் அனைத்தையும் நிச்சயமாகக் குணப்படுத்தலாம், ஆனால் அனைத்தும் ஒரே நாளில் குணப்படுத்த வேண்டும் என்று எண்ணக்கூடாது. எது நெடுநாட்களாக இருக்கும் தொந்தரவோ, அல்லது எந்த உபாதை உங்களை மிகவும் தொந்தரவு செய்கிறதோ, அதை முதலில் குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
மருந்து, மாத்திரை, தைலம், மூலிகை, எதுவுமே இல்லாமலும்; மனதும், உடலும் இணைந்து செயல்படும் போது முறையாகக் கட்டளையிட்டால் உடலின் தொந்தரவுகள் அனைத்தும் படிப்படியாகக் குணமாகிவிடும். மனதின் ஆற்றலை நம்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.