காதலி கவிதை

மனதைத் திருடிக் கொண்டாய்

திருடினால் சாமி
கண்ணைக் குத்துமாம்
சிறுவயதில் அம்மா
சொன்னார்கள்

திருடுவது தவறென்று
உன் அம்மா
கற்றுத்தரவில்லை
போலும்

அதனால்தான்
என் மனதைத்
திருடிக்கொண்டு
கண்ணையும்
குத்திச்சென்றாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *