மனதை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனம் மனிதனின் சக்திவாய்ந்த கருவியாகும், அதை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனம் மட்டுமல்லாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள், மனதையும் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். யார் சொன்னாலும், எதைச் சொன்னாலும், கண்மூடித்தனமாக நம்பிக்கை கொள்ளக் கூடாது. ஏன்? எதற்கு? எதனால்? எப்படி? என்று கேள்விகள் கேட்டு சரியான விளக்கம் கிடைத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் மனதில் உருவாகும் பதிவுகளும், நம்பிக்கைகளும், உங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் குணாதிசயங்களையும் நிர்ணயிக்கின்றன.