மனம்

மனம் தைரியமாக இருந்தால்

woman spreading hair at during sunset

மனம் தைரியமாக இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும். ஒருவருக்கு எந்த நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாகக் குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும். ஒருவர் எந்த வகையான துன்பத்தில், துயரத்தில், சிக்கி இருந்தாலும் இந்த நிலை நிச்சயமாக மாறும், என் வாழ்க்கை சீரடையும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அவரின் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.

எந்த விசயத்தின் மீதும் மனதுக்கு நம்பிக்கையை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நான் தைரியமாக இருக்கிறேன், எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறும் பலரும் மனதளவில் பலவீனமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கூறும் நம்பிக்கை, தைரியம் அனைத்தும் புத்தியின் அளவில் மட்டுமே இருக்கும். அவர்களின் மனமோ அதனை நம்ப மறுக்கும். மனதுடன் மனிதர்களுக்குத் தொடர்பு இல்லாததால் மனதின் பதிவுகளைப் பற்றி மனிதர்களுக்குப் புரிவதில்லை.

சிந்தனை, எண்ணம், புத்தி, மற்றும் மனம் இவை அனைத்தும் வெவ்வேறான விசயங்கள். மனிதர்களின் சிந்தனையிலும், புத்தியிலும், உதிக்கும் விசயங்களை வைத்து, மனதிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விசயத்தை ஒரு தடவை கூறும்போது அல்லது ஒரு தடவை படிக்கும் போது அதனை மனம் நம்பாது. ஒரே விசயத்தை மீண்டும் மீண்டும் பலமுறை சிந்திக்கும் போதும், வாசிக்கும் போதும் மட்டுமே மனம் அதனை நம்பத் தொடங்கும்.

எந்த ஒரு விசயத்தையும் மனதை நம்பவைக்க வேண்டுமென்றால், அந்த விசயத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் மற்றும் கற்பனை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *