மனிதர்களின் மனம், கண்களின் மூலமாக 180 பாகையில் பார்க்கிறது. கண்களின் காணும் எல்லைக்குள் இருக்கும் அத்தனை விசயங்களையும் பதிவு செய்துகொள்கிறது. அதே நேரத்தில் தன்னை சுற்றி நடக்கும், அசைவுகளையும், உணர்ச்சிகளையும், மனம் பதிவு செய்து கொள்கிறது.
மனித அறிவால் அறிய முடியாத விசயங்களையும் மனதால் உணர முடியும், உணர்வில்லாமல் காணும் விசயங்களையும் மனம் காணும், பதிவு செய்துகொள்ளும். அதனால் நாம் எவற்றைக் காணுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.