மனம்

மனச்சோர்வு உருவாகக் காரணங்கள்

woman biting pencil while sitting on chair in front of computer during daytime

மனச்சோர்வு உருவாகக் காரணங்கள். மனச்சோர்வு உருவாவதற்கு பெரும்பாலும் என்னால் இயலாது அல்லது என்னால் இயலவில்லை என்ற அவநம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கிறது. இதுவும் ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்தால் உருவாகும் உணர்வுதான். சிலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, எனக்கு அது இயலவில்லை, எனக்கு அந்தத் திறமை இல்லை, எனக்கு அது கிடைக்கவில்லை என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு மனச்சோர்வு அடைகிறார்கள்.

நான் எதைச் செய்தாலும் அது சரியாக நடப்பதில்லை. நான் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகின்றன. மற்றவர்களைப் போல் என்னால் திறமையாகச் செயல்பட முடியவில்லை. அடுத்தவர்களுக்கு அமைந்த வாழ்க்கை எனக்கு அமையவில்லை. கடவுள் என்னை வஞ்சிக்கிறார்.

என் உடன் பிறந்தவர்கள் வசதியாக வாழ்கிறார்கள், ஆனால் என்னால் இயலவில்லை. என்னுடன் படித்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள், ஆனால் என்னால் இயலவில்லை. என் அண்டை வீட்டுக்காரர்கள் வசதியாக வாழ்கிறார்கள், ஆனால் என்னால் இயலவில்லை. என் உறவினர்கள் என்னை மதிப்பதில்லை. எனக்கு உரிய அங்கீகாரம் இந்த சமுதாயத்தில் கிடைக்கவில்லை.

அவருக்கு அமைந்ததைப் போன்ற மனைவி எனக்கு அமையவில்லை. இவருக்கு அமைந்ததைப் போன்ற கணவன் எனக்கு அமையவில்லை. அவர்களுக்கு அமைந்த பிள்ளைகள் போன்று எனக்கு அமையவில்லை. என்பதைப் போன்ற எண்ணங்களை உருவாக்கி, அதை நம்பத் தொடங்கும்போது, மனம் சோர்வடைகிறது. இனிமேல் எந்த முயற்சியும் செய்யக்கூடாது, என்று முடிவுக்கு வருகிறது. இந்த முடிவு தான் மனம் சோர்ந்து போவதற்குக் காரணமாக இருக்கிறது.

மனச்சோர்வைப் போக்கும் வழிமுறைகளை பின்வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X