மன பதிவுகளும் உண்டாகும் மாற்றங்களும். மனித மனதில் பதிந்துவிட்ட பதிவுகள் அவன் வாழ்க்கையில் மாபெரும் விளைவுகளையும் மாற்றங்களையும் உருவாக்கக் கூடியவை.
கோவிட் தொற்று பற்றிய பயம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கோவிட் தொடர்புடைய எந்த பாதிப்பும் தொந்தரவும் இல்லாத மனிதருக்குக் கூட கொரோனா கிருமிகள் உடலில் இருப்பதாகக் கூறப்பட்டால், மூச்சு திணறல் உண்டாவதைப் போன்ற உணர்வு இருக்கும். கோவிட் தொந்தரவில் பாதிப்புகள் உடலில் தோன்றிவிட்டதைப் போன்ற ஒரு மாயை உருவாகும். கோவிட் நோயாளிகளுக்கு அந்த பாதிப்பு உண்டாகும், இந்த பாதிப்பு உண்டாகும், என்று அவர்கள் கேள்விப்பட்ட, வாசித்த, அனைத்தையும் அவர்கள் அனுபவிப்பதைப் போன்று உணர்வார்கள்.
எந்த பாதிப்பும் இல்லாத மனிதர்களுக்குக் கூட அவர்கள் மனதில் பதிந்திருக்கும் பதிவுகளுக்கு ஏற்பவும், அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்பவும் எதிர்வினைகள் அவர்களின் உடலில் உண்டாகும். தொலைக்காட்சி, நாளிதழ், மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்புகிறவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப விளைவுகள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உண்டாகும்.
தவறான மற்றும் எதிர்மறையான செய்திகளை நம்பாதவர்களுக்கு எந்த வகையான பாதிப்பும் உண்டாவதில்லை. தவறான மனபதிவும், நம்பிக்கையும், மனதில் அச்சமும், இல்லாத காரணத்தால் அவர்களின் உடலில் கிருமி நுழைந்தால் கூட அவர்களுக்கு எந்த வகையான பெரிய பாதிப்பும் உண்டாவதில்லை. அவர்களின் உறுதியும் தைரியமும் அவர்களின் உடலின் ஆற்றலை அதிகரித்து கிருமித் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.
அதன் காரணமாக நேர்மறையான சரியான மனப்பதிவு உள்ளவர்கள் அனைத்து வகையான உடல் உபாதைகளில் இருந்தும் விரைவில் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்