மன அழுத்தங்களுக்குத் தீர்வுகள். மனித மனதின் உண்மையான குணாதிசயம் அமைதி மட்டும்தான். மனதில் உருவாகும் அழுத்தம், சோர்வு, கவலை, வேதனை, அனைத்தும் வெளி சூழ்நிலைகளால் தூண்டப்படுபவை. மனதில் உருவாகும் இந்த மாற்றங்களுக்கும், தொந்தரவுகளுக்கும், அவற்றை அனுபவிக்கும் மனிதருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை. பிற மனிதர் செய்த தவறுகளையும் பேசிய வார்த்தைகளையும் நினைத்து இவர்கள் வேதனைகளை அனுபவம் செய்கிறார்.
யாரோ செய்த தவறுகளுக்கு நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? என்று சிந்திக்காமல். மற்றவர்கள் செய்த செயல்களை நினைத்து-நினைத்து தன்னை வருத்திக் கொண்டு, தன் மனதைக் கெடுத்து, ஆரோக்கியத்தையும் சீர்கெடுத்துக் கொள்கிறார்கள்.
மன அழுத்தங்களில் இருந்து மீண்டு வருவதற்கு வழிமுறைகள்
1. முதலில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதையும், அது உருவாகக் காரணம் என்ன என்பதையும் சிந்தித்துப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
2. உங்களால் எவையெல்லாம் முடியுமோ அவற்றை மட்டுமே செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
3. எப்போதும் உங்களை பிறருடன் ஒப்பிடக் கூடாது.
4. எல்லோராலும் எல்லா விசயங்களையும் செய்ய முடியாது என்பதை உணர வேண்டும்.
5. செய்ய முடியாத விசயங்களை, முடியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
6. என்னால் அது முடியாது என்பது அவமானமல்ல, அது உங்களது தனித்தன்மை என்பதை உணர வேண்டும்.
7. எத்தனை வயதானாலும் புதிய விசயங்களை கற்றுக் கொள்வதற்கு எந்த தடைகளும் கிடையாது. தினமும் புதிய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
8. மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசி, தெரியாத விசயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
9. இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
10. கனவிலும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவோ நினைக்கவோ கூடாது.
11. குடும்பம், ஆரோக்கியம், செல்வம், அனைத்திலும் உங்களிடம் உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
12. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விசயங்களையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளுங்கள்.
13. எந்த விசயத்திலும், அது ஏன் அப்படி நடந்தது? ஏன் இப்படி நடந்தது? ஏன் அவ்வாறு நடக்கவில்லை? என்று மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
14. நீங்கள் ஒரு தனித்தன்மையுடைய படைப்பு என்பதையும், உங்களைப் போல் இந்த உலகில் யாருமே கிடையாது என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள்.
16. இயற்கைக்குத் திரும்புங்கள்.
17. உணவை ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள்.
18. இரவில் விரைவாக படுக்கைக்குச் செல்லுங்கள்.
19. மன அமைதி இல்லாமல் இருந்தாலும், உடல் அசதியாக இருந்தாலும், ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
20. காரண காரியமின்றி எதுவுமே நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
21. உங்களுக்குப் பிடித்த விசயங்களையும், உங்கள் மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய விசயங்களையும் அடிக்கடி செய்யுங்கள்.