மன அழுத்தம் என்பது என்ன?
ஒரு மனிதன் தனது அனுபவத்திற்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும் மீறிய ஒன்றை செயல்படுத்த முயன்று அதை செயல்படுத்த முடியாத போதும், ஒரு விசயத்தை எப்படியாவது செய்துவிட வேண்டும், அடைந்துவிட வேண்டும் என்று அவசரப்பட்டு அது தாமதமாகும் போதும் அவன் மனதில் ஒரு அழுத்தம் உருவாகிறது.
இது ஒருவகையான ஏக்க அல்லது விரக்தி உணர்வாகும். மன அழுத்தம் பிற மனிதர்களின் தூண்டுதல்களாலும் ஒரு மனிதனின் சுயமான பலவீனங்களாலும் கூட உருவாகலாம்.