ஒரு நம்பருக்கு மலச்சிக்கல் இருந்தால் அவரின் ஜீரண சக்தி குறைவாக இருக்கிறது என்று பொருளாகும். அந்த நபர் உட்கொள்ளும் உணவுகள் முழுமையாக ஜீரணம் ஆகாததால் தான் மலச்சிக்கல் உருவாகிறது.
ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்களால் சிறிய அளவு உணவை மட்டுமே ஜீரணிக்க முடியும், அதுவும் பழங்களும் சமைக்காத உணவுகளும் மட்டுமே எளிதில் ஜீரணம் ஆகும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் உட்கொள்ளும் உணவை முழுமையாக ஜீரணிக்கும் தன்மையில் உடல் இல்லாததால் குறைந்த அளவே உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் குறைவாகச் சாப்பிட வேண்டும் அல்லது பழங்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் படுப்பது நல்லது.
Leave feedback about this