மலச்சிக்கல் எதனால் உருவாகிறது?
முதல் நாள் உட்கொண்ட உணவுகள் இரவு வேளையில் முழுமையாக ஜீரணமான பிறகு, அதன் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்கிறது. சத்துக்களை உறிஞ்சிக்கொண்ட பிறகு மீதம் இருப்பவற்றை மலமாக உடல் வெளியேற்றுகிறது. மலம் என்பதே ஜீரணம் மற்றும் உடல் செல்களின் கழிவுகள்தான்.
மலச்சிக்கல் அஜீரணத்தின் வெளிப்பாடு. ஒரு நபருக்கு மலச்சிக்கல் உருவாகிறது என்றால், அவர் உட்கொள்ளும் உணவுகள் முழுமையாக ஜீரணம் ஆவதில்லை என்று பொருளாகும்.
மலச்சிக்கல் இருக்கும் நபர்கள் உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து மலச்சிக்கலை சரி செய்கிறேன் என்று மருந்து மாத்திரைகளை உட்கொள்வது தவறான அணுகுமுறை.