குறைகளுடைய குழந்தை பிறப்பதற்கு இறைவன் காரணமா? குழந்தைகள் ஊனமாகவோ, குறைகளுடனோ, மூளை வளர்ச்சி குறைவாகவோ, பிறந்துவிட்டால் இரண்டு விஷயங்களைத்தான் பெரும்பாலானோர் காரணமாகக் கூறுவார்கள். ஒன்று இறைவன் அந்தக் குழந்தையையும் பெற்றோரையும் சோதிக்கிறார் என்று கூறுவார்கள். அல்லது அந்தப் பெற்றோர் செய்த பாவம் அல்லது பெற்றோர் பெற்ற சாபத்தினால் அந்தக் குழந்தை குறைகளுடன் பிறந்திருக்கிறது என்று கூறுவார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டுமே தவறுதான். இந்த உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் அனைத்து நம்பிக்கைகளும் இறைவன் கருணையுடையவன், நியாயமானவன், அன்பானவன், என்று தான் கூறுகின்றன.
இறைவன் அன்பும் கருணையும் உடையவன் என்ற கூற்று உண்மையாக இருந்தால் இவ்வாறான குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை அல்லவா? ஒரு வேளை இவ்வாறான குழந்தைகள் பிறப்பதற்கு இறைவன் தான் காரணம் என்றால், அந்த இறைவனுக்கு அன்பும் கருணையும் இருக்க வாய்ப்பே இல்லை அல்லவா?
மனிதர்களிலேயே கெட்டவர்கள் கொடூரமானவர்கள் என்று கூறக்கூடிய மனிதர்கள் கூட குழந்தைகளுக்கு தீங்கு செய்யத் தயங்குவார்கள், அவ்வாறு இருக்கையில் அன்பும் கருணையும் உடைய இறைவன் குழந்தைகளை ஊனமாகப் படைப்பாரா? என்றால் நிச்சயமாகக் கிடையாது.
அதனால் மனிதர்களின் துன்பங்களுக்கும் குறைகளுடைய குழந்தைகள் பிறப்பதற்கும் இறைவன் காரணம் இல்லை. வேறு சில கரங்கள் உள்ளன அவற்றை மற்ற கட்டுரைகளில் வாசிக்கலாம்.