நோய்கள்

குறைகளுடைய குழந்தைகளும் விதியும் கர்மாவும்

Baby in Black Pants Holding White Balloon While Standing

குறைகளுடைய குழந்தைகளும் விதியும் கர்மாவும். இன்றைய கால கட்டத்தில் பல குழந்தைகள் ஊனமாகவும் குறைகளுடன் பிறப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூரப்படுகின்றன. அவற்றில் சில உண்மைகளும் சில கற்பனைகளும் கலந்துள்ளன. மனித வாழ்க்கையில் சத்தியமான ஒரு உண்மை என்னவென்றால் எந்த ஒரு காரண காரியமும் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே நடக்காது.

உதாரணத்திற்கு இன்று நம் வாட்சப் குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும். நான் கூறிய பதில்கள் கூட யாரோ சிலருக்கு தேவையானதாகவும் இருக்கும். இதைப் போன்றே குழந்தைகள் குறைகளுடன் பிறப்பதற்கும் நிச்சயமாக சில காரணங்கள் இருக்கும்.

ஆன்மீகம், விதி மற்றும் கர்மா ரீதியான காரணங்கள் என்னவென்றால், அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் பெற்றோர், அதன் குடும்பத்தார், அனைவரும் சேர்ந்து முற்பிறவியில் செய்த தவறுகள் தான் குழந்தை குறைகளுடன் பிறப்பதற்குக் காரணம்.

ஒரு குழந்தை ஊனமாகப் பிறப்பது பெற்றோர்களின் சாபம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனைத்து வேதனைகளையும் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் மட்டுமே தனியாக அனுபவிப்பதில்லை. அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையின் உறவினர்களும் சேர்ந்து தான் வேதனைகளை அனுபவம் செய்கிறார்கள்.

பெற்றோர்கள், குழந்தை மற்றும் அதன் உறவினர்கள் அனைவரும் வேதனையை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே, சில குழந்தைகள் ஊனமாகப் பிறக்கிறார்கள். இல்லை எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களுக்கு நீங்கள் நம்பவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். ஒரு குழந்தை ஊனமாகப் பிறப்பதற்கு, அந்தக் குழந்தையை பராமரிக்க யார் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பார்கள்.

காட்டுக்குள் வாழும் விலங்குகளைப் பார்த்தால் விளங்கும்; விலங்குகள் மிக மிக அரிதாகத்தான் ஊனமாகப் பிறக்கின்றன. மனிதர்கள் தான் மிக அதிகமான குறைகளுடைய குழந்தைகளைப் பெற்று இருக்கிறார்கள். குறைகளுடைய குழந்தைகள் பிறப்பதற்கு அவர்களுடைய போன ஜென்மத்து வாழ்க்கை மட்டுமின்றி. இந்த ஜென்மத்தில் இந்த வாழ்க்கையில் குழந்தையின் பெற்றோர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் உட்கொள்ளும் இரசாயன மருந்துகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

சரி பெற்றோர்களின் இரசாயனப் பயன்பாட்டினால் கருவில் வளரும் குழந்தை ஊனமாக இருந்தால், குழந்தையின் தவறில்லையே. பின்பு ஏன் குழந்தை துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அந்தக் குழந்தை வளர வளர பலவகையான இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்குமே; என்று கேட்பவர்களுக்கு. கருவில் குழந்தை வளரும்போது அதன் வளர்ச்சி ஒரு காலகட்டத்தை அடையும் வரையில் அந்தக் கருவில் உயிர் (ஆன்மா) இருக்காது.

கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பிறகு, அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் குடும்பத்தார், அவர்களின் வாழ்க்கை முறைகளை வைத்து. இந்தக் குழந்தை பிறந்தால் எந்த வகையான இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவம் செய்யும் என்று கணித்து. அந்த அனுபவங்களை, அனுபவிக்க வேண்டிய விதி எந்த ஆன்மாவிற்கு இருக்கிறதோ, அந்த உயிர் அந்தக் கருவில் செலுத்தப்படும்.

அந்த உயிர் குழந்தையாக பூமியில் பிறந்து தன் தண்டனைக் காலம் முடியும் வரையில், அந்தக் குழந்தை ஊனத்துடன் உயிரோடு இருக்கும். சிலருக்கு குறுகிய கால தடையாக இருப்பதால், சில ஊனமுற்ற குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்து விடுவார்கள். தண்டனைக் காலம் அதிகமாக இருந்தால் பல வருடங்கள் உயிரோடு இருப்பார்கள்.