குழந்தைகள் குறைகளுடன் பிறப்பதை தவிர்க்க முடியுமா? நிச்சயமாக முடியும். ஒரு விதை மரமாக வளர வேண்டுமானால், அதற்கு மண், சூரியக் கதிர், நீர், காற்று, சக்தி போன்றவை தேவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும் விதை மரமாகாது. அதைப்போலவே பழைய கர்மாக்கள் கெட்ட பலனை தர வேண்டுமானால், இந்த வாழ்க்கையிலும் தவறான விசயங்களைச் செய்ய வேண்டும். தவறான வாழ்க்கை முறை, தவறான உணவு முறை, சக்தி குறைபாடு, இரசாயனப் பயன்பாடு போன்றவை இருந்தால் மட்டுமே குறையுடைய குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.
உடல் உபாதைகளுக்காக அதிகப்படியான மருந்து மாத்திரைகளையும் இரசாயனப் பயன்பாட்டையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். கர்ப்பக் காலத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்யாதீர்கள், அதிகப்படியான சத்து மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
மனதறிந்து பாவங்களைச் செய்யாதீர்கள், யாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள். யார் நமக்கு என்ன பாவங்கள், துரோகங்கள், செய்திருந்தாலும் அனைத்தையும் மன்னித்து விடுங்கள். நீங்கள் இதுவரையில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடமோ, இறைவனிடமோ மன்னிப்பு கோருங்கள். கர்மாக்கள் கழியும் விதியும் மாற்றமடையும்.
அனைத்தும் நன்மையானதாகா அமையும், வாழ்க்கையில் இன்பமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.