உணவை உட்கொள்ளும் போது குமட்டல் உண்டானாலோ, உணவு திகட்டிவிட்டாலோ உடலின் ஜீரண சக்தி குறைவாக உள்ளது; இதுவரையில் உட்கொண்ட உணவு போதும், இனிமேல் சாப்பிட வேண்டாம் என்று உடல் அறிவிக்கிறது என்று பொருளாகும்.
இவற்றைப் புரிந்துக் கொண்டு உணவை உட்கொள்ளும் போது குமட்டல் உண்டானாலோ, உணவு திகட்டிவிட்டாலோ உணவு உட்கொள்வதை உடனே நிறுத்திவிட வேண்டும்.
உடலின் அறிவிப்பை மீறி உணவை உட்கொண்டால் உடலின் ஜீரண சக்தி மேலும் பழுதடைந்து உடல் பலவீனமாகும் மலச்சிக்கலும் நோய்களும் உண்டாகக் கூடும்.