குழிப்புண் குணமாக வீட்டு மருத்துவம். கால் புண் (குழிப்புண்) குணமாக என் குடும்பத்தில் நான் பயன்படுத்திப் பயன்பெற்ற மருத்துவம். எனது மாமியாருக்கு வயது 76, அவர் 35 வருடங்களாக சுகர் மாத்திரைகளை உட்கொண்டு வந்தவர். 8 மாதங்களுக்கு முன்பாக வலது கால் விரலில் புண் (குழிப்புண்) ஒன்று உருவானது. நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். டாக்டரிடம் சென்று காண்பித்த போது, விரலை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
கடவுளின் கிருபையால் நான் குணப்படுத்த முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன், அதை வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, உனது கை மருத்துவத்தின்படி செய்யம்மா என்று என் மாமியார் மருத்துவம் செய்ய ஒப்புக்கொண்டார்.
அவருக்கு நான் செய்த மருத்துவம்.
1. முதலில் உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தேன்.
2. டீ காபியை அறவே நிறுத்த சொன்னேன்.
3. இரவு உணவைத் தவிர்க்கச் சொன்னேன்.
4. பழங்களை ஒதுக்காமல் இயற்கையான அனைத்து பழங்களையும் சாப்பிடச் சொன்னேன்.
5. பகலில் குளிக்க வேண்டாம் அதிகாலையிலேயே எழுந்து குளியுங்கள் என்றும் சொன்னேன்.
6. ஆவாரம் பூவை நல்லெண்ணெயில் வதக்கி, பகலில் மட்டும் புண் உள்ள இடத்தில் கட்டுப்போட்டேன்.
சரியாக ஒன்றரை மாதங்களில், அந்தப் புண் குணமாகிவிட்டது.
இப்போது விரல் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
இப்போது அவர் எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வதில்லை. மைதாவையும் சீனியையும் தவிர்த்து அனைத்து இனிப்புகளையும், எல்லா பழங்களையும் சாப்பிடுகிறார்கள். அவர் வேலையை அவரே செய்து கொள்கிறார்கள்.
பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள்.
ராஜா ரீகா லுமின்
தூத்துக்குடி
Leave feedback about this