குளத்தில் குளித்தால் புண்கள் உண்டாவது எதனால்?
குளம், ஆறு, குட்டை, கடல் போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளித்தால் சிலருக்கு புண்கள் உண்டாகக்கூடும். இதற்குக் காரணம் நீர் நிலைகளில் இருக்கும் பஞ்சபூத சக்திகளை கிரகித்துக் கொண்டு, உடலின் ஆற்றலை அதிகரித்து, அந்த உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை தோல் மூலமாக உடல் வெளியேற்றத் தொடங்குகிறது.
இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தோலில் புண்கள் உண்டாகின்றன. இரத்தத்தில் கழிவுகள் அதிகம் இல்லாதவர்களுக்கு புண்கள் உண்டாகாது. இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறியதும் புண்கள் தழும்புகள் கூட இல்லாமல் மறைந்துவிடும்.