குழந்தையின் கண் பார்வை பழுதாகக் காரணம். ஒரு காலத்தில் முதியவர்கள் மட்டுமே பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி இன்று சிறு குழந்தைகளும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் வயது வரம்பு இல்லாமல் அனைவரும் கண்ணுக்குக் கண்ணாடி அணியத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பழக்கம் மனிதனின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் தவறான பாதையில் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஒன்றை எப்போதும் மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும், நம் உடலில் உள்ள எந்த உறுப்பும் தானாக பாதியில் பழுதடையாது. இறைவன் நம்மை சிறப்பாகப் படைத்திருக்கிறான், பாதியில் ஓர் உறுப்பு சீர்கேடு அடைந்தால், நம் வாழ்க்கை முறை அல்லது உணவு முறை சரியில்லை என்று பொருளாகும்.
ஒரு குழந்தைக்கு கண் பார்வைக் கோளாறுகள் உருவாகக் காரணம் அதன் தாய் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளும், கர்ப்பமாக இருக்கும் போது செலுத்திக்கொள்ளும் ஊசிகளும். சிறு குழந்தையாக இருக்கும் போது கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளும், ஊசிகளும் குழந்தையின் கண் பார்வை பழுதடைய இன்னொரு காரணம்.
கண்ணைப் பற்றியும் மனித உடல் அமைப்பைப் பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமையும், கண்ணாடி மட்டுமே கண் பார்வைக் கோளாறுக்கு ஒரே தீர்வு என்ற எண்ணமும் மக்கள் கண்ணாடி அணிவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
Leave feedback about this