முதலில் இரவில் குழந்தை உறங்கும் இடத்தை சரிபார்க்க வேண்டும். மின்விசிறி, குளிரூட்டி போன்ற செயற்கை காற்று அதிகமாக இருந்தாலும், அதிக குளுமையாகவோ, காற்றின் அழுத்தம் அதிகமாகவோ இருந்தாலும் சளி உண்டாகக் கூடும்.
அடுத்ததாக குழந்தை அருந்தும் பாலை சரிபார்க்க வேண்டும். தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் தாய்மார்கள், அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகளை சரிபார்க்க வேண்டும். தாய்மார்கள் உட்கொள்ளும் உணவு வகைகள் அதிக குளுமையானவையாக இருந்தாலும், குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் குழந்தைகளுக்கு சளி உண்டாகலாம்.
பவுடர் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு பாலை மாற்றிப் பார்க்க வேண்டும். சில குழந்தைகளுக்கு பவுடர் பால் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் சளி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்றவை உண்டாகக் கூடும்.
மலச்சிக்கல் இருக்கும் குழந்தைகளுக்கும் நெஞ்சுச்சளி உருவாகக்கூடும். மலச்சிக்கல் இருந்தால் பாலை மாற்ற வேண்டும் அல்லது பாலில் அதிகமாகத் தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும்.
Leave feedback about this