நோய்கள்

குழந்தைகளுக்கு நோய் உருவாக என்ன காரணம்?

sick children

குழந்தைகளுக்கு நோய் உருவாக என்ன காரணம்? இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நோய் உண்டாவதற்கு, பசியில்லாத நேரத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகளின் மீது அக்கறையுள்ள பெற்றோர்களே, பசி உண்டாகி உங்கள் குழந்தை உணவைக் கேட்கும் வரையில் அவர்களுக்கு உணவைக் கொடுக்காதீர்கள். சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லுங்கள். இன்று பசியில்லாமல் அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் பிற்காலத்தில் அவர்கள் நோயாளிகளாக சிரமப்படுவதற்கு காரணமாக இருக்கும்.

இதற்கு முந்தைய வேலையில் உட்கொண்ட உணவு முழுமையாக ஜீரணமானால்தான், மறுபடியும் பசி உண்டாகும். பலருக்கு மலக்குடலில் மலம் தேங்கி இருப்பதாலும், வயிற்றில் ஜீரணமாகாத உணவு கிடப்பதாலும் பசி உண்டாவதில்லை. பசி இல்லையென்றால் வயிற்றிலோ குடலிலோ கழிவுகள் தேங்கி இருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம், பசி இல்லாத வேளையிலும் மறுபடியும் மறுபடியும் உணவை உட்கொள்வதுதான் பல நோய்கள் உண்டாவதற்குக் காரணமாக இருக்கிறது.

நன்றாகப் பசி உண்டான பின்னர் உணவை உட்கொள்ளும் பழக்கத்தையும், மலம் வெளியேறும் வரையில் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் வழக்கத்தையும் உண்டாக்கிக் கொள்ளுங்கள். உடலில் எந்த நோயும் உண்டாகாது, ஒரு வேலை இப்போது ஏதாவது நோய்கள் இருந்தாலும் படிப்படியாகக் குணமாகிவிடும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X