வீட்டு மருத்துவம்

கட்டி குணமாக வீட்டு மருத்துவம்

கட்டி குணமாக வீட்டு மருத்துவம் – 1

உடையாமல் பழுக்காமல் பல நாட்களாக இருக்கும் கட்டி விரைவாகப் பழுத்து உடைந்து கழிவுகள் வெளியேறுவதற்கு வீட்டு மருத்துவம்.

துணி துவைக்கும் உப்பு சோப்பை கொழகொழப்பாக கரைத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கட்டி உள்ள இடத்தில் பற்றுப்போட வேண்டும். இதை இரவு நேரத்தில் செய்ய வேண்டும்.

பெரும்பாலும் மறுநாள் காலையில் கட்டி பழுத்து விழுந்து விடும், சிலருக்கு சில நாட்களில் கட்டி பழுத்து விழுந்துவிடும்.

கட்டி குணமாக வீட்டு மருத்துவம் – 2

உடையாமல் பழுக்காமல் பல நாட்களாக இருக்கும் கட்டி விரைவாகப் பழுத்து உடைந்து கழிவுகள் வெளியேறுவதற்கு வீட்டு மருத்துவம்.

சிறிய வெங்காயத்தை எடுத்து, அதன் கூர்மையான பகுதியை லேசாக வெட்டிக்கொண்டு முடிந்த அளவு வெந்தயத்தை அதனுள்ளே குத்திக்கொள்ள வேண்டும்.

அடுப்பு ஓரத்தில் (லேசான நெருப்பில்) அதை வைத்து வேக வைக்க வேண்டும்.

வெந்துவிட்ட சிறிய வெங்காயத்தை அம்மியில் பசையாக அரைத்து கட்டி உள்ள இடத்தில் வைத்துக் கட்டிவிட வேண்டும்.

இது அந்தக் கட்டியைப் பழுக்க வைத்து முழு சலத்தையும் உறிஞ்சி வெளியேற்றி விடும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X