மனம்

காதில் கேட்பதனால் உருவாகும் பாதிப்புகள்

silver-colored earrings

காதில் கேட்பதனால் உருவாகும் பாதிப்புகள். சிலர் நாயையோ, பூனையையோ, எலியையோ, பல்லியையோ, அல்லது கரப்பான் பூச்சியையோ, கண்டால் பயந்து நடுங்குவார்கள். அந்த உயிரினங்களால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் உண்டாகாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கும் அவற்றுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இருந்திருக்காது, இருந்தும் பயப்படுவார்கள். அவர்கள் சிறு வயதாக இருந்தபோது பெரியவர்களிடமிருந்து செவி வழியாக கேள்விப்பட்ட அந்த உயிரினங்களைப் பற்றிய செய்திகளோ, அந்த உயிரினங்களைக் கண்டு பெரியவர்கள் பயந்த நிகழ்வுகளோ அவர்களின் மனதில் பதிந்து அச்சத்தை உருவாக்குகின்றன.

பேய், பிசாசு, ஆவி, பூதம் போன்றவற்றை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவற்றுடன் இவர்களுக்கு எந்த அனுபவமும் இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் அவற்றின் பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குவார்கள். பேய்கள் இருக்கிறதா இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியாது, ஆனால் சிறு வயது முதலாக அவர்கள் கேள்விப்பட்ட பேய்களைப் பற்றிய கதைகள் அவர்களின் மனதில் அச்சத்தை உருவாக்குகின்றன.

அமானுஷ்யங்களைப் பற்றி மனதில் உருவாகி இருக்கும் பதிவுகளால், அவை நிஜத்தில் அவர்களுக்கு நடப்பதைப் போன்ற மாயை உருவாகி பயந்து நடுங்குகிறார்கள். காதால் கேட்கும் விசயங்கள் கூட ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடும் என்பதால் நீங்கள் எவற்றைச் செவிமடுக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுடனும் குடும்பத்திலும் எவற்றைப் பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தேவையற்ற செய்திகள், விசயங்கள், கதைகள், ஓசைகள், வார்த்தைகள், மற்றும் வசனங்களை செவிமடுக்காமல் தவிர்க்க வேண்டும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X