காதலோ காமமோ
காதலோ காமமோ
உனக்காக ஒரு உயிர்
பிரிந்தது
உன் தேநீர்க்
கோப்பையில் ஒரு
ஈயின் மரணம்
உன் அழகில்
மயங்கி விழுந்ததோ
உன் எச்சில் ருசிக்கண்டு
மூர்ச்சையானதோ
தெரியவில்லை
எனக்கு அந்த ஈயின் மீது
கொஞ்சம் பொறாமை
எனக்கு முன் உன்
இதழ் சுவைக் கண்டதே
உன் இதழின்
சுவைக் கண்டால் நானும்
மூர்ச்சையாவேனோ
2 Comments