உன்னைக் காணும் வேளைகளில்
திருவிழா சந்தையின் நடுவில்
ராட்டினத்தை முதன்முதலாய்
பார்க்கும் குழந்தையைப் போன்று
அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும்
வியந்து பிரமிப்புடன் பார்க்கிறேன்
நெருங்கிவரத் துடிக்கிறது மனது
இருந்தாலும் உள்ளுக்குள் அச்சம்
உன்னைப் பார்க்கவும், பேசவும்
கைகோர்த்து நடக்கவும், சிரிக்கவும்
தழுவி இதழில் முத்திரையிடவும்
ஆசை கலந்த பயமாக இருக்கிறது
வானவில்லின் ரசிகனாய்
சலனமின்றி ரசித்துவிட்டு
உன் நினைவுகளை ஓவியமாய்
சுமந்து திரும்பிச் செல்கிறேன்
Leave feedback about this