உன் கூந்தலின்
நறுமணத்தால்
மனம் மயங்கி
உருகி, கரைந்து
ஒற்றை முத்தம்
ஒற்றைத் தழுவல்
ஒற்றைத் தலையணையில்
இரட்டைத் தூக்கம்
ஒவ்வொரு இரவும்
உன்னருகில் நான்
என்னருகில் நீ
கட்டியணைத்து
உன் வெப்பம்
உன் குளுமை
உன் வியர்வை
மூன்றும் சுவைத்து
இரவு முழுவதும்
பகலென வெளிச்சம்
அதன் நினைவில்
பகல் முழுவதும்
இரவெனக் கனவு
மற்றதை
நேரில் பார்த்தால்
சொல்கிறேன்