கர்மாவினால் உண்டாகும் துன்பங்கள். புத்தர் வாழ்ந்த காலத்தில் சில புத்த மடாலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன அப்போது சில புத்த துறவிகள் கொள்ளையர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். புத்தரின் சிஷ்யர்கள் “பாதிக்கப்பட்ட துறவிகள் அனைவரும் முற்றும் துறந்தவர்கள் உணவுக்காகக் கூட விலங்குகளைத் துன்புறுத்தாதவர்கள். சங்கத்தின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்களுக்கு ஏன் கொடூரமான மரணம் நிகழ்ந்தன” என்று புத்தரிடம் கேட்டார்கள்.
அதற்குப் புத்தர் கூறிய பதில். “அகால மரணமடைந்த இந்த புத்தத் துறவிகள் இந்தப் பிறவியில் துறவியாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்திருந்தாலும் கூட அவர்களின் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களுக்காக அவர்களுக்கு இவ்வாறான துன்பங்களும் அகால மரணமும் ஏற்பட்டது” என்று புத்தர் பதிலளித்தார்.
ஒரு மாட்டு வண்டி, அதில் கட்டப்பட்டிருக்கும் காளையைப் பின் தொடர்வதைப் போல மனிதர்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் அவர்களைப் பிறவிகள் தோறும் பின் தொடரும்.
புத்தர்