சூரியனுக்கு முன் எழுந்து
இளஞ் சூரிய உதயத்தை
வேடிக்கைப் பார்க்கிறேன்
காரணம் தெரியவில்லை
இரவு அணைக்கையில்
நிலா நட்சத்திரம் தவழ்வதை
வேடிக்கை பார்க்கிறேன்
காரணம் தெரியவில்லை
தூறல், சாரல், ஈரம்
தென்றல், குளுமை
வேடிக்கை பார்க்கிறேன்
காரணம் தெரியவில்லை
பூத்துக்குலுங்கும் மலர்
மரம், செடி, புல்
வேடிக்கை பார்க்கிறேன்
காரணம் தெரியவில்லை
கல்லூரி வாசலிலும்
கடைத்தெருவிலும் உன்னை
பின் தொடர்கிறேன்
காரணம் தெரியவில்லை
நீ செல்லும் இடமெல்லாம்
சுற்றிச் சுற்றி வருகிறேன்
வேடிக்கை பார்க்கிறேன்
காரணம் தெரியவில்லை
யதார்த்தமாக நீ என்னை
காண வேண்டும் என்று
யதார்த்தம் போல் நான் உன்னை
ரசிக்க வேண்டும் என்று
தினம் கல்லூரிக்குச் செல்லும்
திரும்பும் வேளைகளில்
ஏக்கத்துடன் கடந்து
செல்கிறேன் உன் வீட்டை
காரணம் தெரியவில்லை