வாழ்க்கை

கணவன் மனைவிக்கு சிறந்த அறிவுரைகள்

கணவன் மனைவிக்கு சிறந்த அறிவுரைகள். 17-12-2022 அன்று சென்னையில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்துக்குச் சென்றிருந்தோம். நானும் சில மாணவர்களும் ஆலயத்துக்கு அருகில் நின்று பேசிக் கொண்டும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தோம். மேலே படத்தில் இருக்கும் இந்த அம்மையார் எங்கள் அருகில் நெருங்கி வந்து, எங்கள் செயல்களை கவனித்துக் கொண்டு நின்றார். யாரோ ஒரு பக்தை வேடிக்கை பார்க்கிறார் என்று அலட்சியமாக இருந்து விட்டேன். சற்று நேரத்தில் அந்த அம்மையார் எங்களை நெருங்கி வந்து பேசத் தொடங்கினர்.

எங்கள் குழுவில் இருந்த பெண்களை அவரின் மகள்கள் என்றும் ஆண்களை அவரின் மருமகன்கள் மற்றும் மகன்கள் என்றும் அவரே உரிமை எடுத்துப் பேசினார். அவர் இளம் வயதில் கணவனை இழந்தவர் என்றும், அவர் பெற்றோரின் உதவியுடன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியதாகவும், தற்போது பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று வாழ்ந்து வருவதாகவும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

திருமணமான பத்தே ஆண்டுகளில், நான்கு குழந்தைகளுடன் கணவனை இழந்த நான் கூறுகிறேன்… என்று கூறிவிட்டுச் சொன்னார். இந்த உலகில் கணவன் மனைவி உறவை விட எந்த உறவும் முக்கியமில்லை நிரந்தரமும் இல்லை. பெற்றோர்கள், சகோதரச் சகோதரிகள், பிள்ளைகள் என அனைத்து உறவுகளும் மாறக்கூடியவை ஒரு நேரத்தில் பிரிந்து செல்லக் கூடியவை.

உங்கள் அனைவரையும் என் பிள்ளைகளாக நினைத்துக் கூறுகிறேன் அத்தனை உறவுகளை விடவும் கணவன் மனைவி உறவே முக்கியமானது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் உண்மையாகவும் இருங்கள். மனைவி கணவனிடம் எதையும் மறைக்காதீர்கள், உண்மையாக இருங்கள் என்று கூறினார்.

கணவன் மனைவி உறவில் விரிசல் உண்டான சிலர் ஆலோசனைக்காக என்னைத் தொடர்பு கொள்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த அம்மையாரின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆணுக்கும் பெண்ணுக்கும் மரணம் வரையில் உடன் வரக்கூடியது நல்ல கணவன் மனைவி உறவு தானே? அந்த உறவுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம், எதற்காகவும் கணவன் மனைவி உறவை இழந்துவிடக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X