Person Wearing Brown Hat Holding Wheelbarrow
ஆரோக்கியம்

கல் உப்பு உடலுக்கு மிகவும் நன்மையானது

கல் உப்பு உடலுக்கு மிகவும் நன்மையானது. “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழியை கேள்விப் பட்டிருப்பீர்கள். பண்டங்களுக்கு மட்டுமல்ல மனித உடலுக்கும் உப்பு மிகவும் அவசியமானது. சமையலுக்கு சுவையூட்டுவதை தாண்டியும் உடலுக்கு நன்மையளிக்கக் கூடிய பல தாதுக்கள் உப்பில் உள்ளன. மனிதனின் உடலில் உப்பிலிருந்து கிடைக்கக்கூடிய தாதுக்கள் குறையும் போது பல உடல் உபாதைகளும் தொந்தரவுகளும் உருவாக்கும்.

உடலில் உப்பிலிருந்து கிடைக்கக்கூடிய தாதுக்கள் குறையும் போது ஏற்படக்கூடிய தொந்தரவுகள்

1. உடலில் சோர்வு அல்லது அசதி உண்டாக கூடும்.
2. கை கால் சோர்வு உண்டாக கூடும்.
3. மூட்டுகளில் வலி உண்டாக கூடும்.
4. இடுப்பு மற்றும் தோள்பட்டை வலி உண்டாக கூடும்.
5. சிலருக்கு திடீரென மயக்கம் உண்டாக கூடும்.
6. கர்ப்பப்பை கட்டிகள் உண்டாக கூடும்.
7. பெண்களுக்கு மாத சுழற்சியில் வலி அல்லது தொந்தரவு உண்டாக கூடும்.
8. கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறுகள் உண்டாக கூடும்.
9. ஆண்மைக் குறைபாடுகள் உண்டாகக்கூடும்.
10. ஆண்மை வீரியம் / விறைப்பு தன்மை குறைவு உண்டாக கூடும்.
11. சிலருக்கு குழந்தை இன்மை உண்டாக கூடும்.
12. சிலருக்கு கால் நரம்பு புடைத்தல் உண்டாக கூடும்.

மனிதனின் உடலில் உப்பிலிருந்து கிடைக்கக்கூடிய தாதுக்கள் போதிய அளவு இருந்தால், மேலே கூறப்பட்ட எல்லாத் தொந்தரவுகளும் குறையும், படிப்படியாக குணமாகும். உப்புக்கு இயற்கையாகவே பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறினார்கள்.

இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய உப்பை, ஆங்கில மருத்துவர்கள் உடலுக்கு ஒவ்வாது என்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று ஏன் கூறுகிறார்கள்? காரணம் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளுக்காக மட்டும் லட்சக் கணக்கானோர் உலகம் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பெறுகிறார்கள் ஆங்கில மருந்து கம்பெனிகள்.

இந்த தொந்தரவுகள் சாதாரணமாக பத்து கல்லுப்பில் குணமாக கூடியவை. வருமானம் பாதிக்கும் என்பதாலும், நிரந்தரமான வருமானம் வர வேண்டும் என்பதாலும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உப்பு கெடுதி என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். மருத்துவர்களை தெய்வமாக நம்பும் அப்பாவி மக்கள் வாழ்நாள் முழுவதும் வலிகளினால் அவதிப்படுகிறார்கள். மேலே கூறப்பட்டவை மட்டுமின்றி, ஆங்கில மருத்துவம் கொடிய நோய், குணப்படுத்த முடியாத நோய் என்று கூறும் எல்லா நோய்களின் பின்னாலும் ஒரு பணம் பண்ணும் வியாபார நோக்கம் இருக்கும்.

எது உடலுக்கு பயன்தரும் உப்பு?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை போல கரிப்பதெல்லாம் உப்பல்ல.

1. தூள் உப்பு
2. அயோடின் கலந்த உப்பு
3. பாக்கெட்டுகளில் வரும் உப்பு
4. சுத்திகரிக்கப் பட்ட உப்பு
5. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உப்பு
6. பிற பொருட்கள் கலக்கப்பட்ட உப்பு
7. தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் உப்பு

மேலே குறிப்பிடப்பட்ட எதுவுமே உப்பல்ல, கரிப்பு சுவையுடைய ஒரு பொருள் என்று சொல்லலாம் அவ்வளவுதான். மேலே உள்ள உப்பு வகைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். மனிதர்களின் பல தொந்தரவுகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட உப்பு வகைகளை பயன்படுத்துவதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

கடல் நீரில் இருந்து உருவாக்கப்படும், எந்தக் கலப்படமும் இல்லாத கல் உப்பு மட்டுமே உண்மையான உப்பு. சமையல் முதல் எல்லாத் தேவைகளுக்கும் கல் உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.