கல் உப்பு மருத்துவம். உடலில் உப்பு சத்து குறையும் போது பல்வேறு தொந்தரவுகள் உருவாகக்கூடும். உதாரணத்துக்கு…
1. காரணமில்லாமல் உடலில் சோர்வு அல்லது அசதி உண்டாகக் கூடும்.
2. அடிக்கடி கை கால் சோர்வு உண்டாகக் கூடும்.
3. மூட்டுகளில் வலி உண்டாகக் கூடும்.
4. இடுப்பு மற்றும் தோள்பட்டை வலி உண்டாகக் கூடும்.
5. சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகக் கூடும்.
6. சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க் கட்டிகள் உண்டாகக் கூடும்.
7. சில பெண்களுக்கு மாத சுழற்சியில் வலி உண்டாகக் கூடும்.
8. சில பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறுகள்
உண்டாகக் கூடும்.
9. சிலருக்கு ஆண்மைக் குறைபாடுகள் உண்டாகக்கூடும்.
10. சிலருக்கு ஆண்மை வீரியம் / விறைப்பு தன்மை குறைவு உண்டாகக் கூடும்.
11. சிலருக்கு குழந்தை இன்மை உண்டாகக் கூடும்.
12. சிலருக்கு கால் நரம்பு புடைத்தல் உண்டாகக் கூடும்.
மேலே கூறப்பட்ட தொந்தரவுகள் உள்ளவர்கள், இரண்டு விசயங்களை முதலில் கவனிக்க வேண்டும்.
- எவ்வளவு உப்பு பயன்படுத்துகிறீர்கள்?
- என்ன உப்பு பயன்படுத்துகிறீர்கள்?
அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்துபவராக இருந்தால், உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பு சத்து உடலில் அதிகரித்தாலும் தொந்தரவுகளை உருவாக்கும்.
மிக குறைவாக உப்பை பயன்படுத்துபவராக இருந்தால், உப்பின் பயன்பாட்டை சற்று அதிகரிக்க வேண்டும். உப்பு சத்து குறைந்தாலும் உடலில் தொந்தரவுகள் உருவாகும்.
பாக்கெட் உப்பு, தூள் உப்பு, அயோடின் உப்பு, போன்றவற்றை பயன்படுத்துபவர்கள், அவற்றை முதலில் குப்பையில் போட்டு விட்டு, சுத்தமான கல்லுப்பை வங்கி பயன்படுத்த வேண்டும்.
மேலே கூறப்பட்ட தொந்தரவுகள் உள்ளவர்கள், தினமும் இரவு ஐந்து கல்லுப்பை வாயில் போட்டு, சப்பி எச்சிலுடன் கலந்து விழுங்கினால், தொந்தரவுகள் குறைந்து குணமாகும்.
தொந்தரவு அதிகமாக உள்ளவர்கள் காலையும் இரவும் ஐந்து கல்லுப்பைச் சப்பி எச்சிலுடன் கலந்து விழுங்கினால் தொந்தரவுகள் குறையும்.