சளி, நெஞ்சுச் சளி, மற்றும் மூட்டு வலிக்கு உதவக்கூடிய கை மருத்துவ மூலிகைகள்
குப்பைமேனி இலை
குப்பைமேனி இலையை கசாயம் அல்லது சூப் செய்து குடித்துவர நுரையீரலில் தேங்கியுள்ள சளி கரைந்து வெளியேறும்.
முடக்கத்தான் இலை
முடக்கத்தான் இலை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தேய்க்க மூட்டு வலி குறையும்.
கற்பூரவள்ளி இலை
கற்பூரவள்ளி இலையின் சாற்றுடன் தேன் கலந்து 2 தேக்கரண்டி குடிக்க நெஞ்சுச் சளி முறியும்.
Anusuyadevi – Coimbatore