கோடி கோடியாக
கவிதை எழுதியும்
சொற்களுக்கு இன்னும்
பஞ்சம் உருவாகவில்லை
காகிதங்கள் தீர்ந்துள்ளன
கவிதைகள் தீர்ந்ததில்லை
பெண்களும் காதலும்
இந்த பூமியில் உலாவி
கொண்டிருப்பதனால்
தினம் புதிதாக பிறந்துகொண்டே
இருக்கின்றன கவிதைகள்
பெண்ணும் காதலும் – இன்றி
அமையாது இவ்வுலகு