காதலி கவிதை

காதலி

கருவிழியைக் கருவியாக்கி
கண்ணாலே கன்னமிட்டு
கவர்ந்து

கண்வழியே கண்நுழைந்து
கண்ணுக்குள் கண்ணாகி
கனவாகி

காணும் பொருளாகி
கசிந்து காதலாகி
கரைந்தாளே

காதலாக கருத்தாலே
கலந்தாளே

காலத்தால் கலைத்தாளே
காதல் கனவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X