மேகம் கூடி மழைப் பொழிய
பல மாதங்கள் ஏக்கத்துடன்
காத்திருக்கும் மனிதர்கள்
மழைப் பொழியும் வேளையில்
ஒதுங்கி நிற்பதைப் போன்று

நாள் முழுதும் உன்னைக் காண
ஏக்கத்துடன் காத்திருக்கும் நான்
நீ கடக்கும் வேளைகளில்
உன் கண்ணில் படாமல்

ஒதுங்கி நிற்கிறேன் – என்னை
மறைத்துக் கொள்கிறேன் – என்
காதலை மறைத்ததைப் போன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *