காதல் கவிதை

காதல் மழை

woman on the street holding umbrella

காற்றின் ஈரப்பதத்தை
சிறுகச் சிறுக கோர்த்து
சிறுகச் சிறுக சேர்த்து
பாதுகாக்கும் மேகம்

நேரம் கணிகையில்
சேர்த்த அனைத்தையும்
மடைத்திறந்து பொழியும்
பூமியெங்கும் குளிரும்

சிறுகச் சிறுகச் சேர்த்த
நினைவுகள் அனைத்தையும்
சிறுகச் சிறுக வளர்த்த
ஆசைகள் அனைத்தையும்
உன்மீது பொழிந்துவிட்டேன்

அன்பாக காதலாக கவிதையாக
அவற்றில் நனைவதும்
ஒதுங்கி நிற்பதும்
கடந்துசெல்வதும்

உன் விருப்பம் – ஆனால்
எத்தனை குடைபிடித்தாலும்
மழை ஓயப் போவதில்லை
பொழிந்து கொண்டே இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X