கடவுள் ஆசைகளை நிறைவேற்றுவது இல்லை, தேவைகளையே நிறைவேற்றுகிறார். நம் மனதில் தோன்றும் எல்லா ஆசைகளையும் கடவுள் பூர்த்தி செய்வதில்லை, மாறாக தோன்றும் ஆசைகளை ஆராய்ந்து, அவற்றின் நோக்கம் என்ன? அவற்றின் தேவை என்ன? அவற்றால் யாருக்கு, என்ன பயன்? என்பதை ஆராய்ந்து, அவசியமானவற்றை மட்டும் கடவுள் பூர்த்தி செய்கிறார்.
உதாரணத்துக்கு ஒருவருக்கு மெர்சிடிஸ் கார் வேண்டும் என்ற ஆசை உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். கடவுள் அந்த ஆசை உருவாகக் காரணம் என்ன? அது வெறும் ஆசையா அல்லது தேவையா? என்பதை ஆராய்வார். மெர்சிடிஸ் காரை அடைவதற்கு அவருக்குத் தகுதியும், முயற்சியும், உழைப்பும், தேவையும், இருக்கின்றனவா? என்பத்தையும் ஆராய்வார்.
போதிய தேவையும், உழைப்பும், முயற்சியும் இருந்தால் அவர் விரும்பியது கிடைக்க கடவுள் உதவி செய்வார். அது வெறும் ஆசையாக இருந்தால் அல்லது பயணத்திற்கு ஒரு வாகனம் தேவை என்று இருந்தால், அவருக்கு ஒரு சிறிய காரோ, பைக்கோ கிடைக்கலாம். வேலைக்குச் செல்வதும், தூரப் பயணமும் காரணமாக இருந்தால் அவரின் பயணத் தூரத்தைக் குறைக்கக்கூடிய புதிய வேலையோ, வீடோ அமையலாம்.
இன்னொரு உதாரணம், ஒருவருக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை உருவாகியுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அவரின் தேவை பிரியாணியா அல்லது பசிக்கு உணவா? என்ன சூழ்நிலையில் இப்போது இருக்கிறார்? எது அவருக்குப் பொருத்தமாக இருக்கும்? என்பதை ஆராய்ந்து அவருக்கு பிரியாணியோ அல்லது வேறு வகையான உணவோ கிடைக்க வழிசெய்வார்.
Leave feedback about this