அரசியல்

ஜாதியும் கல்வி அரசியலும்

woman reading What Would Good Do? book

ஜாதியும் கல்வி அரசியலும். இளம் வயதிலேயே உன்னால் முடியாது, உனக்குத் தெரியாது, நீ ஒரு முட்டாள் என்று நம்ப வைக்கப்படும், மீண்டும் மீண்டும் கூறப்படும் சிறுவர் சிறுமிகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த மனோதத்துவத்தை (சைகொலஜி) பயன்படுத்தி தான் நம் குழந்தைகளின் மனநிலையைச் சிதைக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

பள்ளிக்கூடம், பரீட்சை, மதிப்பெண் போன்றவற்றைக் காரணம் காட்டி என்னால் இயலாது நான் முட்டாள் என்று சிறுவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். இது சாதிய அடக்குமுறையின் ஒரு வகையான அரசியல். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதைப் புரிந்து கொண்டு தெளிவாகச் சிந்தித்து முடிவு எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

ஒரு தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நினைத்தால் எந்த மாணவனையும் எந்த உயரத்திற்கும் கொண்டு செல்ல முடியும்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்,
மற்றைய எல்லாம் பிற

குறள் 661

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X