ஜாதகம் மற்றும் ஜோசியத்தின் பயன்பாடு என்ன? ஜாதகமும் ஜோசியமும் நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் அல்ல. நம் முயற்சிக்கும் உழைப்புக்கும் ஏற்றவாறே நம் வாழ்க்கையும் வாழ்க்கையின் பலன்களும் அமைகின்றன.
ஜாதகமும் ஜோசியமும், நாளும் கிழமையும், நல்ல நேரமும் கெட்ட நேரமும், கிரக அமைப்பும், ராசியும், நாம் எதை எல்லாம் செய்யலாம் எதையெல்லாம் செய்யக்கூடாது; எதை எப்போது செய்ய வேண்டும், எப்போது செய்யக்கூடாது; எதுவெல்லாம் நமக்கு கைகொடுக்கும் எதுவெல்லாம் எதிராகச் செயல்படும் என்பதை மட்டுமே காட்டுகின்றன.
இவற்றைப் பயன்படுத்தி, சிந்தித்து, ஆராய்ந்து; சரியாகத் திட்டமிட்டு, சரியான நேரத்தில், சரியானவற்றை செய்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.