இவற்றைச் செய்தால் செல்வம் நிலைத்து நிற்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, எவ்வளவு பணம் இருந்தாலும் சிறிது காலத்தில் செலவாகி விடுகிறது, பணம் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை என்று சொல்பவர்கள் இவற்றை செய்து பாருங்கள் கையில் செல்வம் சேரும், நிலைத்து நிற்கும். செல்வம் சேருவதற்கும் சேர்த்த செல்வம் நிலைப்பதற்கும் சரி செய்ய வேண்டிய சில விசயங்கள்.
முதலில் காசு பணத்தை மதிக்க வேண்டும். பணத்தை மரியாதையுடனும் மதிப்புடனும் கையாள வேண்டும். பணத்தை வாங்கும் போது இரண்டு கைகளால் அல்லது வலது கையால் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும்.
கையில் கிடைக்கும் ஒவ்வொரு பணத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும். சம்பளம் கிடைத்தாலும், சன்மானம் கிடைத்தாலும், அல்லது பொருட்கள் வாங்கி மீதப் பணம் கிடைத்தாலும் கூட தருபவருக்கு நன்றி சொல்லுங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
பணம் கொடுக்கல் வாங்கலை வீட்டின் உள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் வாசலில் நின்றுகொண்டு பணம் கொடுக்கக் கூடாது. மாலை ஆறு மணிக்கு மேல் பணம் கொடுக்கல் வாங்கல் நல்லதல்ல.
பணத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். பணம் வைக்கும் இடத்தில் ஒரு தங்கக் காசு வைப்பது நல்லது. தங்கக் காசு அல்லது தங்கக் கட்டி செல்வத்தை ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. ஒரு கிராம் தங்கக் காசாக இருந்தாலும் பரவாயில்லை, தங்க நகை இதற்கு உதவாது.
மொத்தமான பணத்தை மஞ்சள் அல்லது சிவப்பு துணியில் சுற்றி வைப்பது நல்லது. அல்லது மஞ்சள் அல்லது சிவப்பு துணியின் மீது பணத்தை வைக்கலாம்.
பணத்தை கணக்கு வைத்து செலவு செய்ய வேண்டும். கஞ்சத்தனம் இருக்கக் கூடாது கஞ்சதனம் செல்வ வரவை தடுக்கும் அதே நேரத்தில் வீண் விரயம் செய்யக்கூடாது. தேவையான அவசியமான விஷயங்களுக்காக தனக்கும் குடும்பத்தினருக்கு செலவு செய்ய வேண்டும் ஆனால் வீண் ஆடம்பரம் செய்யக்கூடாது
உங்களிடம் இருக்கும் பணத்தில் சிறிதளவை, பசியோடு இருக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு வழங்குங்கவும், முதியவர்கள், ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்யவும் பயன்படுத்துங்கள்.