அன்பையும் ஆறுதலையும்
உச்சரிக்கும் உதடுகள்
அணைத்துக்கொள்ள
தட்டிக்கொடுக்க தயாராக
இருக்கும் கரங்கள்
சாய்ந்துகொள்ள
கதறி அழ இடம்
கொடுக்கும் தோள்கள்
தலைசாய இளைப்பாற
பணிந்திருக்கும் மடிகள்
இவற்றுக்காக உலகில்
எதை வேண்டுமானாலும்
இழக்கலாம்
எதற்காகவும் இவற்றை
இழந்துவிடக் கூடாது
Leave feedback about this