ஆன்மீகம்

இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவு வகைகள்

இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவு வகைகள். இஸ்லாமியர்கள் எவற்றையெல்லாம், உண்ணலாம் எவற்றையெல்லாம் உண்ணக்கூடாது என்று சில வரையறைகள் உள்ளன. ஒரு சில வரையறைகளைக் கருத்தில் கொண்டு, தடை செய்யப்பட்ட உணவுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை அறிந்துக் கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட உணவு வகைகள்

1. அசுத்தமான மற்றும் கெட்டுப்போன உணவுகள்.

2. மனிதனின் உடலையும் மனதையும் பாதிக்கக் கூடிய உணவுகள்.

3. தானாகச் செத்த விலங்குகளின் மாமிசங்கள். (கடல் வாழ் உயிரினங்களைத் தவிர்த்து)

4. விபத்துக்கள், விலங்குகளுக்கு இடையிலான சண்டையில் செத்த விலங்குகளின் மாமிசங்கள்.

5. காவு கொடுக்கப்பட்ட, படையல், வழிபாடு செய்யப்பட்ட விலங்குகளின் மாமிசங்கள்.

6. நகங்களால் வேட்டையாடும் விலங்குகள், பறவைகள்.

7. பற்களால் கடித்து வேட்டையாடும் விலங்குகள்.

8. நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய உயிரினங்கள்.

9. ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்கள்.

10. இறைச்சியை உண்ணும் உயிரினங்கள்.

11. தோலைத் தனியாக உரிக்க முடியாத உயிரினங்கள்.

12. கழிவுகளை உண்ணும் உயிரினங்கள்.

13. நீரை நக்கி குடிக்கும் உயிரினங்கள்.

14. விசத்தன்மையுடைய மற்றும் மனிதர்களுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய தாவரங்கள் பழங்கள்

மேலே குறிப்பிடப் பட்டவற்றைத் தவிர்த்து மற்ற சுத்தமான விஷத் தன்மையற்ற அத்தனை பழங்களும், தாவரங்களும், கிழங்குகளும், விலங்குகளும், கடல் வாழ் உயிரினங்களும் மனிதர்களுக்கு உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்டவை.

يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  ۖ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்... (அல்குர்ஆன் : 2:168 )
اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்... (அல்குர்ஆன் : 2:173 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X