இஸ்லாமியர்களின் கடமைகள் என்ன?
இஸ்லாமியர்களுக்கு தங்களின் வாழ்நாள் முழுமைக்கும் ஐந்து விஷயங்கள் கடமையாக்க பட்டுள்ளன.
1. “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்” இறைவன் அல்லாஹ் ஒருவனே, நபி முகமது அல்லாஹ்வின் தூதர், என்று உடலளவிலும் மனதளவிலும் உறுதி கூறுவது.
2. ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவது.
3. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது.
4. ஜகாத் கொடுப்பது, வருமானத்திலிருந்து ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கு வழங்குவது.
5. வசதியும், வாய்ப்பும், பாதுகாப்பும், உள்ளவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்வது.