இஸ்லாமிய வாழ்க்கை முறை. இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய வாழ்க்கை முறைகளையும், சட்டதிட்டங்களையும், அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் தயவு செய்து நேரடியாக அல்குர்ஆனில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். எந்த மனிதனையும் நம்பாதீர்கள், முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும், இஸ்லாமிய மார்க்கம் தொடர்புடைய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நேரடியாக அல்குர்ஆனில் இருந்து அறிந்து கொள்வது தான் சிறந்தது.
இன்றைய கால கட்டத்தில் அல்குர்ஆன் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுவிட்டது. இணையத்தில் தேடினால் இலவசமாக எந்த மொழியிலும் அல்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்குர்ஆனை அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஆழமாக ஆராய்ந்து புரிந்துக் கொள்ள விரும்பும் நபர்கள் பல்வேறு மொழி பெயர்ப்புகளையும், பல மொழிகளில் உள்ள மொழி பெயர்ப்புகளையும், வாசித்துப் புரிந்து கொள்வது சிறந்த வழிமுறையாகும்.
அல்குர்ஆன் அரபு மொழியில் இறக்கப்பட்டிருந்தால், அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு அதனை வாசித்து, அதன் கருத்துக்களை முழுமையாகப் புரிந்து கொள்வது சற்று கடினம். அதனால் அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் மொழிபெயர்த்த அல்குர்ஆன் மொழி பெயர்ப்பை வாசித்துப் புரிந்து கொள்வதே சிறந்தது.
இஸ்லாமிய வாழ்க்கைமுறை தொடர்புடைய அனைத்து விசயங்களுக்கும் அல்குர்ஆன் மொழி பெயர்ப்பை வாசித்துப் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் தேடும் தகவல் அல்குர்ஆனில் கிடைக்கவில்லை என்றால் ஹதீஸ்களை வாசித்து அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஹதீஸ் என்பது நபி மொழியின் தொகுப்பாகும். நபி முகமது அவர்கள் உயிரோடு இருக்கும் வேளையில் அவர் பேசிய கருத்துக்கள் மற்றும் சட்ட திட்டங்களின் தொகுப்புதான் ஹதீஸ்.
எந்த காரணத்தைக் கொண்டும் தனி நபர்களிடம் இருந்தோ தனிநபர்கள் எழுதிய நூல்களில் இருந்தோ இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமியச் சட்டதிட்டத்தையும் கற்றுக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள்
Leave feedback about this