இஸ்லாமிய மதத்திற்கும் பச்சை நிறத்திற்கும் என்ன தொடர்பு?
இஸ்லாமிய மார்க்கத்திற்கும் (மதத்திற்கும்) பச்சை நிறத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. நபியோ நபியின் தோழர்களோ பச்சை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததாக எந்த வரலாறும் கிடையாது. சவுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், போன்ற சில இஸ்லாமிய நாடுகள் பச்சை வண்ணத்தை தங்களின் கொடியில் பயன்படுத்துவதால் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் பச்சை நிறத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள்.