ரெய்கி பயிற்சியாளர்கள் இந்த ஆண்டு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்.
1. ஒரு நாளைக்கு இரண்டு முறை, குறைந்தது 15 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள்.
2. உங்கள் நம்பிக்கையின்படி தினமும் இறைவனிடம் பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யுங்கள்.
3. தினசரி ரெய்கி சிகிச்சை மற்றும் ஆற்றல் பயிற்சிகளைச் செய்து வாருங்கள்.
4. அவசியம் இல்லாமல் மற்றவர்களைத் தொடுவதையும் கைகுலுக்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
5. நீங்கள் சோர்வாக இருக்கும் நேரங்களில் மற்றவர்களின் கண்களைப் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
6. எதிர்மறையான நபர்களையும் சூழ்நிலைகளையும் இடங்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
7. முடிந்த அளவு மௌனமாக இருங்கள், குறைவாகப் பேசுங்கள்.
8. எதிர்மறையாக எதையும் சொல்வதையோ, கேட்பதையோ அல்லது பார்ப்பதையோ தவிர்த்துவிடுங்கள்.
9. தினமும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துங்கள்.
10. குறைந்தது வாரம் ஒரு முறை 30 நிமிடங்கள் நிலத்தில் அல்லது பூங்காவில் செருப்பு இல்லாமல் நடங்கள்.
11. உங்கள் வீடு, அறை மற்றும் கழிப்பறையைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
12. வாரம் ஒரு முறை வீட்டில் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி கொளுத்துங்கள்.
13. உடைந்த அல்லது பயன்படுத்தப்படாத தளபாடங்கள் மற்றும் பொருட்களை வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள்.
14. பழைய, சேதமடைந்த அல்லது பயன்படுத்தப்படாத ஆடைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்.
1 Comment