பொருளாதாரம்

இந்தியாவில் கிரிப்டோ நாணயங்களை வாங்குவது எப்படி?

person using black tablet computer

இந்தியாவில் கிரிப்டோ நாணயங்களை வாங்குவது எப்படி? இந்திய அரசாங்கம் இந்தியாவில் கிரிப்டோ நாணயங்களின் விற்பனைக்கும், பரிவர்த்தனைக்கும், பயன்பாட்டுக்கும் தடை விதித்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட முழுமையாக அனுமதி இல்லை. தற்போது முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தடையை நீக்கியுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு எக்ஸ்சேஞ்ச்களில் மூலமாக தற்போது இந்தியாவில் கிரிப்டோ நாணயங்களை வாங்கலாம், விற்பனை செய்யலாம் மற்றும் டிரேடிங் செய்யலாம்.

அந்த இரண்டு எக்ஸ்சேஞ்ச்களில் விவரங்களையும் இணையத்தில் ஆராய்ந்து பார்க்கும் போது அவற்றில் ஒரு எக்ஸ்சேஞ்சில் சில குளறுபடிகள் இருப்பதாக சில பதிவுகளைக் கண்டேன் மேலும் அந்த எக்ஸ்சேஞ்சில் மாதாமாதம் உறுப்பினர் கட்டணமும் விதிக்கப்படுகிறது. இந்த இரு காரணங்களால் அந்த எக்ஸ்சேஞ்சை தவிர்த்து WazirX எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து இந்திய ரூபாயில் டிரேடிங் செய்யத் தொடங்கிவிட்டேன்.

நான் WazirX எக்ஸ்சேஞ்சை தேர்ந்தெடுக்க சில முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக முதலீட்டின் பாதுகாப்பு. WazirX நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்சான Binance மூலமாக இயக்கப்படுகிறது. பைனான்சின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதனால் பணத்துக்கும் உண்மைத் தன்மைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்ததாக இந்திய வங்கிகளில் இருந்து நேரடியாக இந்திய ரூபாயில் முதலீடு செய்யலாம். டிரேடிங் மூலமாக சம்பாதித்த லாபத்தையும், வாலட்டில் மீதமிருக்கும் தொகையையும் நேரடியாக நமது இந்திய வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம்.

வஜிர்எக்ஸ் இணையதளம் பயன்படுத்துவதற்கும் டிரேடிங் செய்வதற்கும் எளிதாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் எளிதாக இருக்கிறது. இங்கு இந்திய ரூபாய் (INR), USDT, WRX மற்றும் Bitcoin மூலமாக டிரேடிங் செய்யலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் குறிப்பிட்ட காலத்துக்கு WazirX எக்ஸ்சேஞ்சில் இருக்கும் நாணயங்களை எந்த சேவைக் கட்டணமும் இல்லாமல் Binance exchange கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம். கிரிப்டோ நாணயம் வாங்கவும் டிரேடிங் செய்யவும் ஆர்வமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து WazirX எக்ஸ்சேஞ்சில் பதிந்து கொள்ளலாம்.

எச்சரிக்கை: கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரிப்டோ நாணயங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும், லாபகரமாகவும் தெரியும், எச்சரிக்கையாக இருக்காவிட்டால் பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கி விடக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X