இனக்குழுக்களும் சாதியும்
இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான மன அமைப்பும் பழக்க வழக்கங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தமிழகத்தில் வாழும் மனிதர்களை மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட அவர்களின் வாழ்க்கை முறைகள் வெகுவாக மாறுபடுவதைக் காண முடியும். உணவு முறை, ஆடை அலங்காரம், கடவுள் நம்பிக்கை, கலாச்சாரம், பண்பாடு, தினசரி வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், தொழில் இப்படி பல விசயங்கள் ஒவ்வொரு சமூகத்துக்கும் மாறுபடும்.
சில சமூகத்தினர் மாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர்கள்,
சில சமூகத்தினர் சாராயம் அருந்தும் பழக்கம் உடையவர்கள், சில சமூகத்தினர் சூதாடும் பழக்கம் உடையவர்கள். சில சமூகத்தினர் வட்டி வாங்கும் பழக்கம் உடையவர்கள், சில சமூகத்தினர் பல பெண்களை மணந்துகொள்ளும் பழக்கம் உடையவர்கள், இப்படி ஒவ்வொரு சமூகத்தாரும் சில தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் உடையவர்கள்.
ஒரு சமூகத்தினர் சரி என்று ஒப்புக்கொள்ளும் ஒரு பழக்கம் இன்னொரு சமூகத்தில் தவறு என்று நம்பப்படலாம். உதாரணத்துக்கு பல தாரத்தை மணந்து கொள்வது சில சமூகத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விசயம் ஆனால் பல சமூகங்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை. அதைப்போல் சில சமூகம் சாராயம் அருந்துவதை சரி எனக் கூறும், சில சமூகம் வட்டி வாங்குதல் சரி எனக் கூறும், சில சமூகம் மாமிசம் உண்ணுவதை சரி எனக் கூறும், ஆனால் மற்ற பல சமூகங்கள் இவற்றைத் தவறு எனக் கூறும்.
ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு இனக்குழுவும் வெவ்வேறு வகையான நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் கொண்டிருப்பதனால் பல்வேறு இனக்குழுக்கள் உருவாகின்றன. காலப்போக்கில் பல இன மக்கள் இணைந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் பொழுது சாதி முறை உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு இனக்குழுவின் பழக்கவழக்கமும் நம்பிக்கையும் மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்குள் திருமணம் போன்ற முக்கியமான உறவுகள் வைத்துக் கொள்வதில்லை.
Leave feedback about this