இம்யூன் சிஸ்டம் எனும் பாதுகாப்பு சக்தி. (immune system) இம்யூன் சிஸ்டம் என்றால் நோயெதிர்ப்பு சக்தி என்றுதான் நாம் பொருள் கொள்கிறோம். உண்மையில் இம்யூன் சிஸ்டம் என்றால் பாதுகாப்பு சக்தி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மனித உடலின் முழுமையான செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் இந்த இம்யூன் சிஸ்டமே துணைபுரிகிறது. இந்த பாதுகாப்பு சக்தி (இம்யூன் சிஸ்டம்) பலவீனமாக இருக்கும் வேளைகளில் தான் மனிதன் நோய்வாய்ப்படுகிறான்.
பாதுகாப்பு சக்தி (இம்யூன் சிஸ்டம்) என்றால் என்ன?
உடலில் இம்யூன் சிஸ்டம் என்று தனியாக எதுவும் கிடையாது. மனித உடலின் இயல்பான இயக்க வேலைகளில் ஒன்று தான் இந்த இம்யூன் சிஸ்டம். மனித உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் வேலையைத்தான் இம்யூன் சிஸ்டம் என்று அழைக்கிறார்கள். மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் பிரத்தியேகமான அறிவு இருக்கிறது, ஒவ்வொரு செல்லுக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலும் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் இம்யூன் சிஸ்டம் என்பது நோய் உண்டான பிறகு உடலைக் குணப்படுத்துவது அல்ல, அல்லது நோய் உருவாகாமல் தடுப்பது மட்டுமல்ல, மாறாக உடலின் முழுமையான இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் சக்திதான் இம்யூன் சிஸ்டம். உடலின் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒருவர் தன்னையே அறியாமல் கெட்டுப்போன உணவை உண்ண முயற்சி செய்தால், கை முதலில் உணர்த்தி விடும். உணவு கையில் பட்டதும் தோலின் பிசுபிசுப்பு காட்டிவிடும். அடுத்தது மூக்கு கெட்டுப்போன உணவின் கெட்ட வாடையைக் கண்டுபிடித்து சுட்டிக்காட்டும். அதைக் கவனிக்காமல் வாயில் போட்டால், வாய் குமட்டல் உணர்வைக் கொடுக்கும். அதையும் கண்டுகொள்ளாமல், உடலையும் மீறி மென்று விழுங்கினால். உடல் வாந்தியின் மூலமாக கெட்டுப்போன உணவை வெளியேற்றிவிடும். அந்த வாந்தியைத் தடுத்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். அந்த வயிற்றுப் போக்கையும் தடுக்கும் போது, அந்த கெட்டுப்போன உணவு உடலின் உள்ளேயே தங்கி பல கேடுகளை உடலுக்கு உண்டாக்குகிறது.
இவ்வாறு தோல், மூக்கு, நாக்கு, வயிறு, குடல் என உடலின் பல பாகங்களும் கெட்டுப்போன உணவு உடலுக்குள் சென்றுவிடாமல் தடுக்க முயல்கின்றன. உடலின் அறிகுறிகளை எல்லாம் மீறிச் செய்பவர்கள் தான், தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்பவர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உடலின் உள்ளே செல்லும் போது தான் உடலில் பல உபாதைகள் உருவாகின்றன?
உடலுக்கு பாதிப்பை உருவாக்கக்கூடிய எதுவும் உடலுக்குள் சென்றுவிடாமல் உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது. அந்த அளவுக்கு மிகப் பாதுகாப்பாக இந்த உடலை இறைவன் வடிவமைத்திருக்கிறார்.
நோயெதிர்ப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்) பலப்படுத்த
மனித உடல் முழுமையாக தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில்தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். அதனால் பாதுகாப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்), அதிகரிக்க என்று சிறப்பாக நாம் எதையும் செய்யவோ, சாப்பிடவோ தேவை கிடையாது.
Leave feedback about this