இக்கட்டான சூழ்நிலையில் உதவக்கூடிய பிரார்த்தனை. சோதனைகள் உண்டாகும் வரையில் காத்திருக்காமல். “சோதனைகள் இல்லாத அமைதியான நிம்மதியான வாழ்க்கையை தா” என்று எப்போதும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். எல்லா பாதைகளும் அடைபட்ட பிறகும், எங்குச் செல்வது? என்ன செய்வது? என்று திண்டாடும் போதும் கூட, நமக்கு மேலே இருப்பவனைத் தான் நாட வேண்டும், அவன்தான் இறுதியான நம்பிக்கை.
அளவில்லா இன்பமும் பொருளும் தன்னகத்தே கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் கையேந்தாதீர்கள். அவன் அருளைப் பெற்றுக்கொள்ள உங்கள் கரங்கள் போதுமானவை அல்ல. மனதைத் திறந்து வையுங்கள். உலகம் முழுவதும் உங்கள் காலடியில் கிடைக்கும்.
எப்போதும் எந்த சூழ்நிலையும் இறுதியல்ல. மீண்டுவர எழுந்துவர எப்போதும் ஒரு வாய்ப்பிருக்கும், இறைவனை நம்புங்கள். இக்கட்டான உயிர் போகக்கூடிய சூழ்நிலையில் நபி யூனுஸ் ஓதிய இந்த பிரார்த்தனை அவரின் உயிரைக் காத்தது.
மனிதர்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் உதவக்கூடிய பிரார்த்தனை இது என்றும், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
சுத்தமாக கை கால்களைக் கழுவிக்கொண்டு, அமைதியாக அமர்ந்து. நம்பிக்கையுடன் தினம் 40 முறைகள் இந்த பிரார்த்தனையை ஓதிவந்தால், இறைவனின் உதவியால் துன்பங்கள் அனைத்தும் பனிபோல் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். முஸ்லிம்கள் மட்டுமின்றி இறைவன் ஒருவன் என்று நம்பிக்கை கொண்ட எவரும் இந்த பிரார்த்தனையை ஓதிவரலாம். எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் உங்கள் பிரார்த்தனை பூர்த்தியாகும்.
யூனுஸ் நபி ஓதிய துவா (பிரார்த்தனை)
لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
“ La ilaha illa anta subhaanaka inni kuntu minazzholimiin.”
“லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினழ் ழாலிமீன்”
பொருள்:
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. [அல்குர்ஆன் 21:87]
இந்த பிரார்த்தனை பற்றிய அல்குர்ஆன் வசனம்.
وَ ذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّـقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ ۖ ۚ
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் : 21:87 )
فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّؕ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ
எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம். (அல்குர்ஆன் : 21:88 )
Leave feedback about this