ஹோலிஸ்டிக் ரெய்கியின் அறிமுகம் இன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய 65 வகையான ரெய்கி பயிற்சிகள் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒரு பிரபல்யமான ரெய்கி கலைதான் குண்டலினி ரெய்கி. இந்த ரெய்கி முறை மிகவும் எளிமையானது, ரெய்கி சின்னங்களோ, மந்திரங்களோ, சிக்கலான நடைமுறைகளோ, எதுவுமே இல்லாதது.
எளிமையாக, குண்டலினி சக்தியை எழுப்புவதன் மூலமாகவும், பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்குவதன் மூலமாகவும்; மனித வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உதவக்கூடிய ரெய்கி முறையாகும். குண்டலினி ரெய்கியில் மனித உடல், மனம், மற்றும் ஆன்ம வளர்ச்சிக்கு உதவக்கூடிய சில அம்சங்களை இணைத்து வடிவமைக்கப்பட்டது தான் ஹோலிஸ்டிக் ரெய்கி.
ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி, மனித வாழ்க்கையின் அத்தனை தேவைகளையும், சூழ்நிலைகளையும், உள்ளடக்கியிருப்பதால் இதற்கு “ஹோலிஸ்டிக் ரெய்கி” என்று பெயரிட்டுள்ளேன். ஹோலிஸ்டிக் என்ற வார்த்தைக்கு “முழுமை” என்று பொருளாகும்.
ஹோலிஸ்டிக் ரெய்கி மனிதர்களின் வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும், மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும். ஹோலிஸ்டிக் ரெய்கி, ஆற்றல், உடல், மனம், புத்தி, அலைகள், அதிர்வுகள், ஆத்மா, ஆன்மீகம், என பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மகிழ்ச்சியான, அமைதியான, மனித வாழ்க்கைக்கு முழுமையான தீர்வாக அமையும்.